Home / Entertainment / Cinema / Cine News / ரஜினியின் ரசிகர் மன்றத்தின் அதிரடி பெயர் மாற்றம்

ரஜினியின் ரசிகர் மன்றத்தின் அதிரடி பெயர் மாற்றம்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெயர் ‘ரஜினி மக்கள் மன்றம்’ என அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார்.

அவரது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினி பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதனையடுத்து தற்போது அவர் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை அதிரடியாக மாற்றியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத்தின் பெயர் ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு முழுவதும் 22 ஆயிரம் ரஜினி மன்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 30 ஆயிரம் மன்றங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்த நிலையில் ரஜினியின் ‘அகில இந்திய ரசிகர் மன்றம்’, ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்