Home / Entertainment / Cinema / Cine News / ரஜினி,கமல் அரசியல் வருகையினை ரகசியமாக சாடி பேசும் பிரேமலதா விஜயகாந்த்

ரஜினி,கமல் அரசியல் வருகையினை ரகசியமாக சாடி பேசும் பிரேமலதா விஜயகாந்த்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் ஆலை முன் அமர்ந்து பிரேமலதா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூறுகையில், ” தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தற்போது கட்சி ஆரம்பிக்க உள்ளனர். நீங்கள் எல்லாம் எதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும், நிம்மதியாக தூங்க வேண்டியது தானே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது அரசியலுக்கு யார் யாரெல்லாமோ வருகிறார்கள். கட்சி ஆரம்பிக்கிறவர்களால் மக்களுக்காக போராட முடியுமா.தேமுதிக கட்சி மக்கள் மனதில் பதிந்திருப்பதற்கு காரணம் தொடர்ந்து மக்களுக்காக போராடி வருவதே” என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் கமல் மற்றும் ரஜினி அரசியலுக்கு நுழைவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவர்களை சாடும் விதமாக, பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்