Home / Entertainment / Cinema / Cine News / குறும்படத்தில் நடிக்கும் டோனி

குறும்படத்தில் நடிக்கும் டோனி

Tags
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி. இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகி வசூலை குவித்தது. கேப்டன் பதவியில் இல்லாதபோதும் அவரது ரசிகர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.

பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வரும் அவரை திரைப்படங்களில் நடிக்கவும் அழைக்கிறார்கள். ஆனால், அவர் அதனை மறுத்து வருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’,’எமன்’ போன்ற படங்களை இயக்கிய கோலிவுட் இயக்குனர் ஜீவா சங்கர், தற்போது டோனியை வைத்து ஓர் குறும்படம் இயக்க போகிறாராம்.

இது, விளையாட்டு பின்னணியிலான படம். ‘ரன் ஆடம்’ என்ற செயலி, இந்திய இளைஞர்களின் விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை பற்றியது தான் இந்த குறும்படம்.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்