Home / Entertainment / Cinema / Cine News / ரஜினிக்கு வாக்களிக்க முடியாது என்று நேரடியாக கூறிய இயக்குனர்

ரஜினிக்கு வாக்களிக்க முடியாது என்று நேரடியாக கூறிய இயக்குனர்

அரசியல் வருகைக்கு ரஜினிக்கு ஆதரவாக பலரும், எதிராக சிலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் தனது முகநூலில் ஓர் தகவலை ரஜினிக்கு நேரடியாகவே தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “அன்புடன் ரஜினிகாந்த் சர்க்கு., வணக்கம். நான் உங்களின் தீவிர ரசிகன். அதை என் முதல் படைப்பிலேயே பதிவு செய்தவன். ஆனால் ஒரு வாக்காளனாக, ஒரு தமிழனாக ., என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியாது. இனி ஒரு விதி செய்வோம்.., அது யாதனின்- இனி நம் தமிழ் மண்ணை ஒரு தமிழனே ஆள வேண்டும். ஆனால் தமிழ் திரை உலகில்., நீங்கள்தான் என்றும் எங்களின் ‘சூப்பர் ஸ்டார்’. நன்றி.., என்றும் அன்புடன் எஸ்.ஆர்.பிரபாகரன் – திரைப்பட இயக்குனர்” என்று கூறியுள்ளார்.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்