Home / Entertainment / Cinema / Cine News / ரஜினியின் அரசியல் வருகை குறித்து அமீர்

ரஜினியின் அரசியல் வருகை குறித்து அமீர்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து இயக்குனர் அமீர் துவக்கம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என கூறிவிட்ட நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அமீர் கூறுகையில், “மத, இன, பேதமற்ற ஆன்மிக அரசியல் என ரஜினி தெளிவாக தனது ஆன்மிக அரசியலை பற்றி சொல்லிவிட்டார்.

ஆனால் ஏன் அவர் ஏன் அடுத்த நாள் ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றார் என கேள்வி எழுகிறது. தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக ரஜினியை பயன்படுத்துகிறதோ என்ற அச்சம் உள்ளது. கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகச் சொன்ன போது ஹரிஹரசர்மா, தமிழிசை எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொன்னதும் ஆதரவு தெரிவிப்பதால் பாஜகவின் பின்னோட்டம் இருக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “ரஜினியை மக்கள் தேர்ந்தெடுத்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்