Home / Entertainment / Cinema / Reviews / உலக அழகி போனால் கூட பார்க்காதவர்கள், ஏன் அரவாணி சென்றால் இப்படி பார்க்கின்றார்கள் – அருவி படம் எப்படி

உலக அழகி போனால் கூட பார்க்காதவர்கள், ஏன் அரவாணி சென்றால் இப்படி பார்க்கின்றார்கள் – அருவி படம் எப்படி

அருவி முதல் காட்சியிலேயே தீவிரவாதி என்று விசாரணை நடத்தப்படுகின்றாள். அதை தொடர்ந்து ஒவ்வொருத்தரும் அருவி யார் என்று சொல்ல ஆரம்பிக்க அப்படியே கதை தொடங்குகின்றது.

அருவி சிறு வயதிலிருந்தே சுதந்திரமாக வளரும் ஒரு பெண், அப்பா கொடுத்த முழு சுதந்திரத்தோடு வளரும் அவளுக்கு மிகப்பெரும் ஒரு துன்பம் வர, வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகின்றது. அதன் பிறகு இந்த சமூகத்தின் மீதுள்ள கோபம், தான் வாழ்க்கையில் சந்தித்த சோகம் என்று அனைத்தையும் சொல்ல ஒரு தொலைக்காட்சிக்கு வர அங்கு பல அதிர்ச்சிகரமான தகவலை அருவி சொல்ல, அதை தொடர்ந்து நடக்கும் பரபரப்பான சுவாரஸ்யமான, உணர்வுப்பூர்வமான காட்சிகளே மீதிக்கதை.

படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் என்றாலும் வெறுமென புரட்சி மட்டும் பேசாமல் அதை காட்சிகளாக அருண் எடுத்த விதம் அருமை. இரண்டாம் பாதியில் அனைத்து ஆண்களையும் அழ வைத்து அருவி சிரிக்கும் காட்சி சூப்பர். படம் முழுவதும் அருவிக்கு உதவியாக ஒரு திருநங்கை வருகின்றார். அவரும் மிகவும் யதார்த்தமான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் ‘உலக அழகி போனால் கூட பார்க்காதவர்கள், ஏன் அரவாணி சென்றால் இப்படி பார்க்கின்றார்கள்’ என கேட்கும் காட்சி சூப்பர்.

படத்தின் ஒளிப்பதிவும் தத்ரூபமாக உள்ளது. சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட ரசிக்கத்தக்க வகையில் தான் உள்ளது. மொத்தத்தில் ‘அருவி’ அதன் உயரத்தை எட்டியது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்