Home / Entertainment / Cinema / Cine News / நடிகை ஸ்ரீ தேவி காலமானார்

நடிகை ஸ்ரீ தேவி காலமானார்

நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 54.

நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது 4 வயதில் இருந்து நடிக்க துவங்கினார். அதன் பின் கதயநாயகியாக பல வெற்றி படங்களில் நடித்தவர் 1978ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமாகி அங்கும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

மேலும், மலையாளம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வெற்றி வாகை சூடிய இவர், போனி கபூரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வினை துவங்கினார்.

2012ம் ஆண்டு மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய இவர் புலி, மாம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தனது கணவர், மற்றும் குழந்தைகளான ஜான்வி மற்றும் குஷி ஆகியோருடன் இவர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்